இயக்குனர் மிஷ்கின் இசையமைப்பாளராக களமிறங்குகிறார்.
மிஷ்கின் தமிழ் திரை உலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர். சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, நந்தலாலா, சைக்கோ, பிசாசு உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கியுள்ளார்.
மேலும் ஆண்ட்ரியா, பூர்ணா, ராஜ்குமார் பிச்சுமணி உள்ளிட்டோரின் நடிப்பில் ‘பிசாசு 2’ படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். கடந்தாண்டு இந்தப் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.
இயக்குனராக இருக்கும் இவர் தற்போது நடிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். மாவீரன், லியோ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இவ்வாறு இயக்கம் நடிப்பு என பிசியாக இருக்கும் இவர் தற்போது ஒரு புதிய படத்தில் இசை அமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார்.
‘சவரக்கத்தி’ பட இயக்குனரும், மிஷ்கினின் சகோதரருமான ஜிஆர் ஆதித்யா தற்போது ‘டெவில்’ எனும் படத்தை இயக்குகிறார். இந்தப் படத்திற்கு இயக்குனர் மிஷ்கின் இசையமைத்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் இதனை உறுதி செய்யும் விதமாக சோனி மியூசிக் ஆடியோ நிறுவனம் ட்விட்டர் பக்கத்தில் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்நிறுவனமே டெவில் படத்தின் ஆடியோ உரிமையை கைப்பற்றி இருக்கிறது.