எல்லா வகையிலும் பெண்களுக்கு நடைபெறும் கொடுமைகளை தடுப்பதன் ஒரு சிறிய முயற்சியே அரசி திரைப்படம் என அப்படத்தின் நாயகி வரலட்சுமி சரத்குமார் தெரிவித்தார்.

நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் நடித்துள்ள அரசி திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவானது சென்னை வடபழனி பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார்,இயக்குனர் பேரரசு, தயாரிப்பாளர் கே.ராஜன் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய நடிகை வரலக்ஷ்மி சரத்குமார், “பெண்களுக்கு எல்லா வகையிலும் கொடுமைகள் நடந்துக் கொண்டிருக்கிறது. அதை தடுக்க ஒரு சிறிய முயற்சி தான். கிறிஸ்துமஸ் என்றும் பாராமால் வந்த எல்லோருக்கும் நன்றி, நேரமின்மை காரணமாக நான் ஒரு படப்பிடிப்பிற்கு செல்ல வேண்டி உள்ளது” எனக் கூறி அவர் புறப்பட்டார்.
தொடர்ந்து பேசிய இயக்குனர் பேரரசு, “ஒரு திருமணம் முடிந்து வரவேற்பு நிகழ்ச்சிக்கு உறவினர்களுக்கு அழைப்பு விடுப்பார்கள், அந்த நேரத்தில் மாப்பிள்ளையும் பெண்ணும் நீங்க வரவேற்புக்கு வாருங்கள் நாங்கள் செல்கிறோம் என்று சொன்னால் எப்படி இருக்கும். அப்படித்தான் இருக்கிறது இந்த நிகழ்வு படத்தின் நாயகன் வேலை இருக்கிறது என்று சென்று விட்டார், படத்தின் நாயகி வரலக்ஷ்மி சரத்குமார் வேலை இருக்கிறது என்று கிளம்பிவிட்டார். படத்தின் இயக்குநரும் வரவில்லை. இசை வெளியீட்டு விழா நாயகன் இசையமைப்பாளர் நிகழ்ச்சியில் பங்கேற்கவே இல்லை.

படக்குழுவினரே இல்லாமல் நாங்கள் படத்தை பற்றி பேசி என்ன பயன்? பெரிய நடிகர்களே 50 ஆயிரம் சம்பளம் வாங்கிய போது கேபி சுந்தராம்பாள் 1 லட்சம் வாங்கினார். அவருக்கு அடுத்த படி விஜயசாந்தி, அதன் பிறகு தற்போது நயன்தாரா அதேபோல் வரலட்சுமியும் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கிறார். ஆண்களுக்கு நிகராக பெண்களை பழக விடுவதே தவறுக்கு காரணம் தான். அடக்கமாக இருக்கவேண்டும் தவிர பெண்கள் ஒடுக்கமாக இருக்க கூடாது. ஒரு பெண்ணுக்கு தவறு நேர்ந்தால் அதற்கு முழு காரணமும் ஆண் தான். அடுத்தது பெற்றோர் பெண் படித்தவர் என்று அவர் சொல்வதை கேட்டு நடக்கிறார்கள். அங்கே தான் தப்பு நடக்கிறது. குழந்தைகள் முன்னாடி பெற்றோர்கள் தயவு செய்து முட்டாள்களை போல் காட்டிக் கொள்ள வேண்டாம்.
வாத்தியாருக்கும் பெற்றோருக்கும் அடங்காத பிள்ளை எப்படி ஒழுக்கத்தை கற்று கொள்ள முடியும்.தமிழ்நாட்டில் தமிப்பாடங்களும் இல்லை, நீதி பாடங்களும் இல்லை. மதுவினால் ஏற்படும் தீமைகளை பற்றிய கதை ஒன்ற பகிர்ந்துக் கொண்டார். டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கு பதில், ரெட் லைட் ஏரியாக்களை திறப்பது மேல்.சினிமாவில் மட்டுமே செய்யும் குற்றங்களுக்கு தண்டனைகள் கிடைக்கிறது. இந்த அரசாங்கம் முதலில் பெண்கள் பாதுகாப்பிற்கு முதலில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். பேருந்து இலவசமாக அளிப்பது ஒரு உதவி மட்டுமே, அது பெண்களுக்கு பாதுகாப்பில்லை, சட்டங்கள் தண்டனையாக்கப்பட வேண்டும். பெண்களை கற்பழித்தவனை நடு ரோட்டில் சுட வேண்டும் அதை நேரடியாக ஒளிபரப்பு செய்ய வேண்டும்.
படத்தில் இயக்குனர் இசையமைப்பாளரை நாங்ககளே பங்கேற்க வேண்டாம் என்று சொல்லிவிட்டோம். காரணம் நம்பிக்கை துரோகம் செய்தவர்கள் யாரும் விழாவிற்கு வரவேண்டாம் என்று சொல்லிவிட்டோம். அதனால் தான் அவர்கள் வரவில்லை என்று படத்தின் தயாரிப்பாளர் கூறினார். படத்தின் இசையமைப்பாளர் இசைக்கு வரவில்லை என்று சொல்கிறார்கள், அவர் நேற்று வரை எங்களுக்கு படத்தை முடித்து கொடுக்கவில்லை. படத்திற்கு இயக்குனர், இசையமைப்பாளரே உதவி செய்யவில்லை என்றால் ஒரு பெண் தயாரிப்பாளர் என்று இப்படி செய்கிறார்களா. அவர் அதிகம் விஜய் சேதுபதிக்கு வேலை செய்திருக்கிறார்” எனக் கூறினார்.