இயக்குனர் பிரேம்குமார், 96 பார்ட் 2 படம் குறித்து பேசி உள்ளார்.
தமிழ் சினிமாவில் ’96’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரேம்குமார். மென்மையான காதல் கலந்த திரைக்கதையில் வெளியான இந்த படத்தில் விஜய் சேதுபதி – திரிஷா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ரத்தம் தெறிக்கும் வன்முறை காட்சிகள் இடம்பெறும் படங்களுக்கு மத்தியில் காதலின் ஆழத்தை உணர்த்தும் விதமான அருமையான படத்தை வழங்கியிருந்தார் பிரேம்குமார். இந்த படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. அதைத்தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் உருவாகப்போவதாகவும், இது தொடர்பாக பிரேம்குமார் ஸ்கிரிப்ட் எழுதும் பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் ஏற்கனவே தகவல் வெளியானது. அதே சமயம் சமீபகாலமாக 96 பார்ட் 2 படத்தில் விஜய் சேதுபதி நடிக்கவில்லை எனவும் அதற்கு பதிலாக வேறொரு நடிகர் நடிக்கப்போகிறார் எனவும் சொல்லப்பட்டது. இது ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் 96 பார்ட் 2 படத்தின் கதையை படித்துவிட்டு தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், பிரேம்குமாருக்கு விலை உயர்ந்த தங்க சங்கிலியை பரிசாக கொடுத்திருக்கிறார் எனவும் செய்திகள் வெளியானது. இதன் மூலம் படத்தின் மீதான எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாகியது. இந்நிலையில் இப்படம் தொடர்பாக பிரேம்குமார் சமீபத்தில் நடந்த பேட்டியில் பேசியுள்ளார்.
“#96Part2 Script has been completed & it’s my best writing so far.💯 Friends said ‘It is far better than 96’📈. When IshariGanesh sir heard the script, he given a gold chain worth several lakhs💰. I will do with same cast (or) i won’t do it❌”
– #Premkumar pic.twitter.com/4YqUKLQcJf— AmuthaBharathi (@CinemaWithAB) September 24, 2025

அதன்படி அவர், “96 பார்ட் 2 படத்தின் ஸ்கிரிப்ட் பணிகள் கடந்த டிசம்பர், ஜனவரி மாதத்திலேயே முடிந்துவிட்டது. இதுவரை நான் எழுதியதில் இதுதான் சிறந்தது. என்னுடைய நண்பர்கள் இந்த ஸ்கிரிப்ட்டை படித்துவிட்டு இது ’96’ படத்தைவிட மிகவும் அருமையாக இருக்கிறது என்று சொன்னார்கள். ஐசரி கணேஷ் சார் ஸ்கிரிப்டை படித்து முடித்துவிட்டு பல லட்சம் மதிப்புள்ள தங்கச் சங்கிலி பரிசாக வழங்கினார். மேலும் நான் அதே நடிகர்களை வைத்து தான் ’96 பார்ட் 2′ பண்ணுவேன். இல்லையென்றால் அந்தப் படத்தை பண்ணவே மாட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.