Homeசெய்திகள்சினிமாபிரபல இயக்குனர் சித்திக் மாரடைப்பால் மரணம்!

பிரபல இயக்குனர் சித்திக் மாரடைப்பால் மரணம்!

-

- Advertisement -

பிரபல இயக்குனர் சித்திக் மாரடைப்பால் காலமானார்.

மலையாளத்தில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் சித்திக்.எங்கள் அண்ணா, சாதுமிரண்டா, விஜய் நடித்த பிரண்ட்ஸ், காவலன் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். இறுதியாக இவர் தமிழில் அரவிந்த் சாமி நடிப்பில் வெளியான ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ என்ற படத்தை இயக்கியிருந்தார்.இந்நிலையில் கடந்த சில காலமாக சிறுநீரக மற்றும் நிமோனியா பிரச்சனையால் சிகிச்சை எடுத்து வந்த இவருக்கு நேற்று மதியம் மூன்று மணி அளவில்  தீவிரமான மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் கொச்சியில் உள்ள அமிர்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த தகவல் திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

MUST READ