Homeசெய்திகள்சினிமாநடிகராக அவதாரம் எடுக்கும் வெற்றிமாறன்... அசுர வேட்டை ஆரம்பம்...

நடிகராக அவதாரம் எடுக்கும் வெற்றிமாறன்… அசுர வேட்டை ஆரம்பம்…

-

மிஷ்கின் இயக்கத்தில் உருவாகும் ட்ரெயின் திரைப்படத்தின் மூலம் இயக்குநர் வெற்றிமாறன் நடிகராக அறிமுகமாகிறார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை முதல் பாகம் வரவேற்பை பெற்றதை தொடர்ந்து தற்போது விடுதலை இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இதில் சூரி, விஜய் சேதுபதி, மஞ்சு வாரியார் ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தை அடுத்த ஆண்டு வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. இதனிடையே, வெற்றி மாறன் படம் நடிக்க உள்ளதாகவும் அண்மையில் தகவல்கள் வெளியாகின.

அதன்படி, இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ட்ரெயின். இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். ஒரு ரயில் பயணத்தில் நடக்கும் திகில் நிறைந்த கதை என்று கூறப்படுகிறது. எனவே படத்திற்கு ட்ரெயின் என தலைப்பு வைத்ததாக தெரிகிறது. விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில், டிம்பிள் ஹயாதி படத்தில் நாயகியாக நடிக்கிறார். மேலும், ஈரா, நாசர், வினய், பவானா, சம்பத் ராஜ் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் பூஜை அண்மையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் பங்கேற்றனர்.

படத்தின் இயக்குநராக உள்ள மிஷ்கினே படத்திற்கு இசையும் அமைக்கிறார். பவுசியா படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். படத்தின் புதிய தகவலாக, இயக்குநர் வெற்றிமாறன் நடிகராக அறிமுகமாகிறார். மிஷ்கின் இயக்கும் புதிய படத்தின் மூலம் வெற்றிமாறன் நடிகராக அவதாரம் எடுக்கும் செய்தி ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. அண்மையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ், வெற்றிமாறனை பல முறை நடிக்க வைக்க முயற்சி செய்ததாக குறிப்பிட்டிருந்தார்.

MUST READ