- Advertisement -
தமிழில் வெளியாக உள்ள ஹார்ட் பீட் வெப் தொடர், கொரியாவில் ஹிட் அடித்த தொடரின் ரீமேக் என்று படக்குழு தெரிவித்துள்ளது.
ஓடிடி நிறுவனங்களின் ஆதிக்கத்தை தொடர்ந்து தற்போது தமிழிலும் அடுத்தடுத்து வெப் தொடர்கள் வௌியாகின்றன. அறிமுக இயக்குநர்கள் மட்டுமன்றி முன்னணி இயக்குநர்களும் வெப் தொடர்களை இயக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம் தயாரித்துள்ள புதிய தொடர் ஹார்ட் பீட். பிரபல ஸ்டன்ட் மாஸ்டர் சூப்பர் சுப்புராயன் திரைக்கதை எழுதி உள்ளார். மேட்லி பூஸ் இந்த தொடருக்கு இசை அமைத்திருக்கிறார்.
