Homeசெய்திகள்சினிமாதெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மெல் பாய்ஸ்'.... எப்போது தெரியுமா?

தெலுங்கில் வெளியாகும் ‘மஞ்சும்மெல் பாய்ஸ்’…. எப்போது தெரியுமா?

-

இயக்குனர் சிதம்பரம் எஸ் பொதுவால் இயக்கத்தில் கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி மஞ்சும்மெல் பாய்ஸ் திரைப்படம் வெளியானது.தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மெல் பாய்ஸ்'.... எப்போது தெரியுமா? இந்த படத்தை பரவா பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. சுசின் ஷியாம் இசையமைக்க சைஜூ ஹாலித் ஒளிப்பதிவு செய்து இருந்தார். படத்தில் சௌபின் சாகிர், ஸ்ரீநாத் பாசி, பாலு வர்கீஸ், லால் ஜூனியர் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்கொடைக்கானலில் உள்ள குணா புகையில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து வெளியான இந்த படம் கேரளாவை தாண்டி தமிழ்நாட்டிலும் ரசிகர்களின் பேராதரவை பெற்று அதிக வசூலை வாரிக் குவிக்கிறது. அந்த வகையில் தமிழகத்தில் மட்டுமே 60 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்திருக்கும் இந்த படம் உலக அளவில் 200 கோடியை கடந்து வசூல் செய்து வருகிறது. கேரளாவிலிருந்து கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்லும் நண்பர்களில் ஒருவர் பால் தவறி குணா குகைக்குள் விழுந்து விடுகிறார். அவரை உடன் இருக்கும் மற்ற நண்பர்கள் எப்படி காப்பாற்றுகிறார்கள் என்பதை எமோஷனல் கதைக்களத்தில் கூறியிருந்தது மஞ்சும்மெல் பாய்ஸ். தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மெல் பாய்ஸ்'.... எப்போது தெரியுமா?இந்த படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த விலையில் வருகின்ற ஏப்ரல் 5ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இந்த படம் தெலுங்கில் ஏப்ரல் 6ம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த படம் தெலுங்கிலும் நல்ல வசூலை பெற்றுத்தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ