Homeசெய்திகள்சினிமா'ஜனநாயகன்' படத்தில் விஜய்க்கு அம்மாவாக நடிப்பது யார் தெரியுமா?

‘ஜனநாயகன்’ படத்தில் விஜய்க்கு அம்மாவாக நடிப்பது யார் தெரியுமா?

-

- Advertisement -

ஜனநாயகன் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.'ஜனநாயகன்' படத்தில் விஜய்க்கு அம்மாவாக நடிப்பது யார் தெரியுமா?

விஜய் நடிப்பில் தற்போது ஜனநாயகன் திரைப்படம் உருவாகி வருகிறது. ஹெச். வினோத் இயக்கத்தில் கேவிஎன் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அதேசமயம் படமானது 2026 பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி 9ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து வெளிவரும் ஒவ்வொரு தகவல்களும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி வருகிறது. 'ஜனநாயகன்' படத்தில் விஜய்க்கு அம்மாவாக நடிப்பது யார் தெரியுமா?அந்த வகையில் இப்படத்தில் நடிகர் விஜய் போலிஸ் அதிகாரியாக நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது. ஏற்கனவே இந்த படம் அரசியல் கதைக்களம் என்று தகவல் வெளியாகி வரும் நிலையில், விஜய் போலீஸாக நடிப்பது, இந்த கதை எந்த மாதிரியான கதை என்ற ஆர்வத்தை தூண்டி உள்ளது. இது தவிர நந்தமுரி பாலகிருஷ்ணாவின் பகவந்த்கேசரி படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சி ஒன்று ஜனநாயகன் படத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது. 'ஜனநாயகன்' படத்தில் விஜய்க்கு அம்மாவாக நடிப்பது யார் தெரியுமா?அடுத்தது இன்னும் சில நாட்களில் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்து விடும் என சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இந்த படத்தில் விஜயின் அம்மாவாக நடிகை ரேவதி நடிக்கிறார் என புதிய தகவல் கிடைத்திருக்கிறது. மேலும் பூஜா ஹெக்டே, பாபி தியோல், நரேன், பிரியாமணி, மமிதா பைஜூ, பிரகாஷ் ராஜ், கௌதம் மேனன் ஆகியோரும் இந்த படத்தில் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ