Homeசெய்திகள்சினிமாகங்குவா டப்பிங் தொடக்கம்... சூர்யாவுக்கு மதன் கார்க்கி உதவி...

கங்குவா டப்பிங் தொடக்கம்… சூர்யாவுக்கு மதன் கார்க்கி உதவி…

-

சிறுத்தை சிவா இயக்கி வரும் கங்குவா படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளன.

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நாயகன் சூர்யா. அவரது தந்தை சிவக்குமார் நடிகராக இருந்தாலும், தனது நடிப்பில் மூலம் மட்டுமே சினிமாவில் உயரத்திற்கு சென்ற பெருமை இவரைச் சேரும். அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். சூர்யா நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வெளியானது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றன. இதைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் படத்தில் வில்லனாக நடித்து மிரட்டியிருந்தார்.

இப்படத்தைத் தொடர்ந்து சூர்யா நடிக்கும் புதிய திரைப்படம் தான் கங்குவா. இப்படத்தை பிரபல கமர்ஷியல் இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கி உள்ளார். சூர்யாவின் திரை வாழ்வில் மாபெரும் பட்ஜெட்டில் வரலாற்று கதைக்களத்தில் இத்திரைப்படம் உருவாகிறது. படத்தில் பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி நாயகியாகவும், பாபி தியோல் வில்லனாகவும் நடிக்கிறார். பிரபல இசை அமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசை அமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவு பெற்றது.

படப்பிடிப்பைத் தொடர்ந்து தற்போது படத்தின் பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. இதையொட்டி படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கி இருக்கின்றன. நடிகர் சூர்யா தனது பாத்திரத்திற்கு டப்பிங் பணிகளை தொடங்கி இருக்கிறார். டப்பிங்கின்போது அவருக்கு உதவ பாடல் ஆசிரியர் மற்றும் கவிஞர் மதன் கார்க்கி உதவி வருகிறார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

MUST READ