spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாகலைஞர் 100 விழாவையொட்டி இரண்டு நாட்களுக்கு படப்பிடிப்புகள் ரத்து

கலைஞர் 100 விழாவையொட்டி இரண்டு நாட்களுக்கு படப்பிடிப்புகள் ரத்து

-

- Advertisement -
கலைஞர் 100 விழாவை ஒட்டி ஜனவரி 4 மற்றும் 5 ஆகிய இரண்டு தேதிகளில் படப்பிடிப்பை ரத்து செய்து அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்தாண்டு கலைஞர் கருணாநிதியின் 100-வது பிறந்தநாள் என்பதால், ஆண்டு முழுவதும் நூற்றாண்டு விழாவாக கொண்டாட சிறப்பு ஏற்பாடுகளை திமுகவினர் செய்தனர். தமிழக அரசு சார்பிலும் நூற்றாண்டு விழாவை பிரமாண்டமாகக் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தின் படி, தமிழ்த் திரையுலகம் சார்பில், பெப்சி, நடிகர் சங்கம் உள்பட அனைத்து சங்கங்களுடன் ஒன்றிணைந்து கலைஞர் நூற்றாண்டு விழாவை கோலாகலமாககக் கொண்டாட முடிவு செய்தனர்.

ரஜினி, கமல், விஜய், அஜித் என அனைத்து நடிகர்களுக்கும் அழைப்பிதழ் கொடுத்து, விழாவில் பங்கேற்க வேண்டுகோள் விடுத்தனர். கமலும், ரஜினியும் விழாவிற்கு நிச்சயம் வருவதாக தெரிவித்தனர். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்த விழா நடைபெறவுள்ளது. வருகிற 24ம் தேதி விழா நடைபெறுவதாக இருந்த விழாவை இப்போது ஜனவரி 6ம் தேதிக்கு மாற்றியுள்ளனர். இந்நிகழ்ச்சியை முன்னிட்டு ஜனவரி 4 மற்றும் 5 தேதிகளில் படப்பிடிப்புகள் ஏதும் நடைபெறாது என இயக்குநர் ஆர்.கே.செல்வமணி அறிவித்துள்ளார்.

MUST READ