துல்கர் சல்மான் தற்போது அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் கிங் ஆப் கோத்தா திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இப்படம் வருகின்ற ஆகஸ்ட் 25 ல் வெளியாக இருக்கிறது. இதற்கிடையில் கன்ஸ் அண்ட் குலாப்ஸ் என்ற வெப் சீரிஸிலும் நடித்துள்ளார். இது வருகின்ற ஆகஸ்ட் 18ம் தேதி வெளியாக இருக்கிறது. இதைத்தொடர்ந்து லக்கி பாஸ்கர்,காந்தா உள்ளிட்ட படங்களில் நடிக்க இருக்கிறார். இன்னும் சில படங்களை கைவசம் வைத்துள்ளார்.
இவ்வாறு பிசியாக நடித்து வரும் துல்கர் சல்மானின் புதிய படத்தின் டைட்டில் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. ‘கோலி’ என்று தலைப்பிடப்பட்டுள்ள புதிய படத்தில் துல்கர் சல்மான் நடிக்கிறார். இதனை அட்லீயின் உதவி இயக்குனரான கார்த்திகேயன் வேலப்பன் இயக்குகிறார். இந்த புதிய படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். இந்தப் படத்தை துல்கர் சல்மானின் வேஃப்பரர் செல்லும் நிறுவனம் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது. ஜிவி பிரகாஷ் இதற்கு இசையமைக்கிறார்.
மிகுந்த பொருட்செலவில் தமிழ் மற்றும் மலையாளம் உள்ளிட்ட இரு மொழிகளிலும் இப்படம் உருவாகிறது. மேலும் இது தொடர்பான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.