spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஅடுத்த பான் இந்தியா படத்தில் துல்கர் சல்மான்..... அதிரடியாக வெளியான டைட்டில் லுக்!

அடுத்த பான் இந்தியா படத்தில் துல்கர் சல்மான்….. அதிரடியாக வெளியான டைட்டில் லுக்!

-

- Advertisement -

துல்கர் சல்மான் மலையாள திரை உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஆவார். இவர் தற்போது பான் இந்தியா நடிகராக உருவெடுத்துள்ளார்.
இவர் நடிக்கும் பெரும்பாலான படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்று வருகிறது. அந்த வகையில் இவர் நடித்த ‘சீதாராமம்’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு பிறகு தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அபிலாஷ் ஜோசி இயக்கத்தில் ‘கிங் ஆப் கோத்தா’ எனும் திரைப்படத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து வெங்கி அட்லூரி இயக்க இருக்கும் ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இதற்கிடையில் ‘கன்ஸ் அண்ட் குலாப்ஸ்’ என்ற வெப் சீரிஸிலும் நடித்துள்ளார். இந்த வெப் சீரிஸ் வருகின்ற ஆகஸ்ட் 18ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் துல்கர் சல்மான் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் வெளியாகி உள்ளது. இந்த தலைப்பு குறித்த அறிவிப்பை துல்கர் சல்மானின் பிறந்த நாளான நேற்று படக்குழுவினர் போஸ்டருடன் அறிவித்துள்ளனர்.
ஒரு பான் இந்தியா படமாக உருவாகவுள்ள இந்த படத்திற்கு ‘காந்தா’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

we-r-hiring

இந்தப் படத்தை பிரபல தெலுங்கு நடிகர் ராணா டகுபதி ஸ்பிரிட் மீடியா மற்றும் வேஃபரர் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கிறார். இந்த படத்தை அட்லீயின் உதவி இயக்குனரான செல்வமணி செல்வராஜ் எழுதி இயக்குகிறார். இந்த படம் குறித்த மற்ற அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ