spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாதுல்கர் சல்மான் நடிக்கும் 'காந்தா' திரைப்படம் பூஜையுடன் தொடங்கியது!

துல்கர் சல்மான் நடிக்கும் ‘காந்தா’ திரைப்படம் பூஜையுடன் தொடங்கியது!

-

- Advertisement -

துல்கர் சல்மான் நடிக்கும் காந்தா திரைப்படம் பூஜையுடன் தொடங்கியுள்ளது.துல்கர் சல்மான் நடிக்கும் 'காந்தா' திரைப்படம் பூஜையுடன் தொடங்கியது!

நடிகர் துல்கர் சல்மான் மலையாள திரையுலகில் ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்திருக்கிறார். அதே சமயம் தமிழிலும் ரசிகர் பட்டாளங்களை தன் பக்கம் கவர்ந்து வைத்திருக்கும் துல்கர் சல்மான் சீதாராமம் படத்திற்கு பிறகு பான் இந்திய அளவில் ஏராளமான ரசிகர்களை கைவசம் வைத்துள்ளார். இவரது நடிப்பில் கடைசியாக கிங் ஆஃப் கொத்தா திரைப்படம் வெளியானது. அடுத்தது 2024 தீபாவளிக்கு லக்கி பாஸ்கர் எனும் திரைப்படம் வெளியாக இருக்கிறது. இதற்கிடையில் நடிகர் துல்கர் சல்மான், காந்தா எனும் திரைப்படத்தில் நடிக்க போவதாக அறிவிப்பு வெளியானது. அதன்படி இந்த படத்தை செல்வராஜ் செல்வமணி இயக்குகிறார். மேலும் பிரபல தெலுங்கு நடிகர் ராணா டகுபதியின் ஸ்பிரிட் மீடியா நிறுவனமும் மற்றும் துல்கர் சல்மானின் வேஃபரர் ஃபிலிம்ஸ் நிறுவனமும் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தில் துல்கர் சல்மான் உடன் இணைந்து சமுத்திரக்கனி, பாக்யஸ்ரீ போர்ஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

we-r-hiring

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பான் இந்திய அளவில் உருவாகும் இந்த படம் தொடர்பான அறிவிப்பு வெளியானதிலிருந்தே படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் பூஜை இன்று (செப்டம்பர் 9) சிறப்பாக நடந்துள்ளது. இந்த பூஜையில் துல்கர் சல்மான், வெங்கடேஷ், ராணா, சமுத்திரக்கனி, பாக்யஸ்ரீ போர்ஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பூஜை தொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

MUST READ