Homeசெய்திகள்சினிமாதுல்கர் சல்மான் நடிப்பில் உருவாகும் 'லக்கி பாஸ்கர்'..... லேட்டஸ்ட் அப்டேட்!

துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகும் ‘லக்கி பாஸ்கர்’….. லேட்டஸ்ட் அப்டேட்!

-

- Advertisement -

லக்கி பாஸ்கர் படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

துல்கர் சல்மான் சீதாராமம் திரைப்படத்திற்கு பிறகு தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவரின் நடிப்பில் கிங் ஆப் கொத்தா திரைப்படம் வெளியானது. மேலும் காந்தா உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார்.

இவர் வாத்தி பட இயக்குனர் வெங்கி அட்லுரியின் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இது சம்பந்தமான அறிவிப்பு ஏற்கனவே போஸ்டர் உடன் வெளியானது. இந்நிலையில் லக்கி பாஸ்கர் படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜை உடன் தொடங்கியுள்ளது. இந்த பூஜையில்  துல்கர் சல்மான்  கலந்து கொண்டுள்ளார். இது சம்பந்தமான புகைப்படங்கள் தற்போது அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. மேலும் இதன் படப்பிடிப்புகளும் விரைவில் தொடங்கும் என கூறப்படுகிறது. இந்தப் படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் ஃபார்ச்சூன் போர் சினிமாஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இதில் துல்கர் சல்மான் உடன் இணைந்து மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார். ஜிவி பிரகாஷ் இதற்கு இசை அமைக்கிறார். இதன் அடுத்த அப்டேட் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ