Homeசெய்திகள்சினிமாதேம்பி அழுத ரசிகையின் ஆசையை நிறைவேற்றிய துல்கர் சல்மான்!

தேம்பி அழுத ரசிகையின் ஆசையை நிறைவேற்றிய துல்கர் சல்மான்!

-

- Advertisement -

நடிகர் துல்கர் சல்மான், சீதாராமம் படத்திற்கு பிறகு இந்திய அளவில் பிரபலமாகிவிட்டார். அதைத்தொடர்ந்து பான் இந்திய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் துல்கர் சல்மான். தேம்பி அழுத ரசிகையின் ஆசையை நிறைவேற்றிய துல்கர் சல்மான்!கடைசியாக இவரது நடிப்பில் கிங் ஆப் கொத்தா திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. அதைத் தொடர்ந்து இவர், பிரபாஸின் கல்கி 2898AD திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். மேலும் இவர் லக்கி பாஸ்கர் எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தினை தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான வாத்தி பட இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கி இருக்கிறார். இந்த படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. ஜி.வி. பிரகாஷ் இதற்கு இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் துல்கர் சல்மான் உடன் இணைந்து ராம்கி, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்த படம் வருகின்ற தீபாவளி தினத்தை முன்னிட்டு அக்டோபர் 31 ஆம் நாளில் திரைக்கு வர தயாராகி வருகிறது. தேம்பி அழுத ரசிகையின் ஆசையை நிறைவேற்றிய துல்கர் சல்மான்!அதற்கான முழு ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் லக்கி பாஸ்கர் படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றுள்ளது. அப்பொழுது மேடையில் பேசிக் கொண்டிருந்த துல்கர் சல்மானை பார்த்து பெண் ரசிகை ஒருவர் தேம்பி அழுதார். அவரை மேடைக்கு அழைத்து அவருடன் புகைப்படம் எடுத்து அவரின் ஆசையை நிறைவேற்றினார் துல்கர் சல்மான். இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

MUST READ