அர்ஜுன் தாஸ் நடிக்கும் ஒன்ஸ் மோர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
நடிகர் அர்ஜுன் தாஸ் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவராவார். இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான கைதி, மாஸ்டர் உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானவர். தற்போது இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிப் படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். கடைசியாக இவரின் நடிப்பில் ரசவாதி எனும் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. அடுத்தது அர்ஜுன் தாஸ் நடிப்பில் ஒன்ஸ் மோர் எனும் திரைப்படம் உருவாகி இருக்கிறது. ரொமான்டிக் காதல் சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் அர்ஜுன் தாஸுக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடித்திருக்கிறார். இந்த படத்தினை மணிகண்டனின் குட் நைட் மற்றும் லவ்வர் ஆகிய படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. விக்னேஷ் ஸ்ரீகாந்த் இந்த படத்தை இயக்க ஹேஷம் அப்துல் வாகப் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். அரவிந்த் விஸ்வநாதன் இதன் ஒளிப்பதிவு பணிகளையும் மேற்கொண்டுள்ளார்.
The stage is all set for love to take over 🥰❤️#OnceMore First single “Miss Oruthi” in the amazing vocals of @nareshiyer drops Tomorrow at 5PM 🎷🎼
Written & directed by @isrikanthmv ✨
A @heshamawmusic musical 🎶— Million Dollar Studios (@MillionOffl) October 23, 2024
ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்த படத்தின் டைட்டில் டீசரை படக்குழு வெளியிட்டு இருந்தது. அத்துடன் இப்படமானது அடுத்த ஆண்டு காதலர் தினத்தை முன்னிட்டு திரைக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி ஒன்ஸ் மோர் படத்திலிருந்து மிஸ் ஒருத்தி எனும் முதல் பாடல் நாளை (அக்டோபர் 24) மாலை 5 மணி அளவில் வெளியாகும் என படக் குழு ப்ரோமோ வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.