Homeசெய்திகள்சினிமாதொடர்ந்து டிரெண்டிங்கில் டன்கி ட்ரைலர்... பாலிவுட் சினிமாவில் சாதனை...

தொடர்ந்து டிரெண்டிங்கில் டன்கி ட்ரைலர்… பாலிவுட் சினிமாவில் சாதனை…

-

- Advertisement -

ஜவான் படத்தைத் தொடர்ந்து ராஜ்குமார் ஹிராணி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான டன்கி பட ட்ரைலர் தொடர்ந்து யூ டியூப்பில் டிரெண்டிங் முதலிடத்தில் உள்ளது.

பாலிவுட்டின் ஜாம்பவானாக வலம் வருபவர் ஷாருக்கான். அவரது நடிப்பில் இறுதியாக வெளியான பதான் மற்றும் ஜவான் ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்தன. இதையடுத்து, ஷாருக்கான் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் டன்கி. இந்த படத்தில் ஷாரூக்கானுடன், டாப்ஸி, விக்கி கவுசல் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர். இந்த படத்தை முன்னாபாய் எம்.பி.பி.எஸ்., பி.கே. உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த ராஜ்குமார் ஹிரானி இயக்கியுள்ளார்.

5 நண்பர்களுடன் வௌிநாடு செல்வதை மையப்படுத்தி இத்திரைப்படம் நகைச்சுவை கலந்த திரைப்படமாக உருவாகி உள்ளது. இப்படத்தின் முதல் தோற்றம் மற்றும் டீசர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், அண்மையில் படத்தின் ட்ரைலர் வெளியானது. ட்ரைலர் வெளியான 24 மணி நேரத்தில் 10 கோடி பார்வையாளர்களை கடந்து புதிய சாதனை படைத்தது. அதுமட்டுமன்றி ட்ரைலர் வெளியாகி இரண்டு நாட்கள் ஆன போதிலும், தொடர்ந்து டிரெண்டிங்கில் உள்ளது.

MUST READ