spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஆயிரம் கோடி செலவு செய்தாலும் அந்த தமிழ் படத்தை போல் வராது.... நடிகர் நானி!

ஆயிரம் கோடி செலவு செய்தாலும் அந்த தமிழ் படத்தை போல் வராது…. நடிகர் நானி!

-

- Advertisement -

நடிகர் நானி தமிழ் சினிமாவில் தனக்கு பிடித்தமான படம் குறித்து பேசி உள்ளார்.ஆயிரம் கோடி செலவு செய்தாலும் அந்த தமிழ் படத்தை போல் வராது.... நடிகர் நானி!

தெலுங்கு சினிமாவில் டாப் நடிகராக வலம் வரும் நானி தமிழிலும் வெப்பம், நான் ஈ போன்ற படங்களில் நடித்திருக்கிறார். அடுத்தது இவர், நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தமிழில் புதிய படம் ஒன்றில் நடிக்கப் போவதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையில் இவர் தி பாரடைஸ் படத்தை கைவசம் வைத்துள்ளார். இது தவிர இவரது நடிப்பில் உருவாகியுள்ள ஹிட் 3 திரைப்படம் வருகின்ற மே மாதம் 1ஆம் தேதி திரைக்கு வர தயாராகி வருகிறது. இந்த படமானது ஆக்சன் திரில்லர் ஜானரில் உருவாகி இருக்கிறது. இதனை சைலேஷ் கோலானு இயக்கியுள்ள நிலையில் இப்படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் நடிகர் கார்த்தி சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பதாக சொல்லப்படுகிறது.

we-r-hiring

இந்நிலையில் தான் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் பேசிய நானி, “தமிழ் சினிமாவில் கடந்த 10 ஆண்டுகளில் எனக்கு மிகவும் பிடித்தமான படம் மெய்யழகன். ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்தாலும் மெய்யழகன் படம் போல் வராது. இந்த படத்தில் மேஜிக் இருக்கிறது. பிரேம்குமார் ஒரு கிளாசிக்கான படத்தை கொடுத்திருக்கிறார். அந்த படத்தை பார்த்த பிறகு கார்த்தியிடம் பேசினேன். மெய்யழகன் படத்தை பற்றி நினைக்கும் போதெல்லாம் நான் மகிழ்ச்சியாக உணர்வேன்” என்று பாராட்டிள்ளார்.

MUST READ