ஐந்து மிகப்பெரிய ஹிட் படங்களை கொடுத்தும் இன்று எவராலும் கண்டுகொள்ளப்படாத நிலையில் உள்ளார் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ்.
இவர் இயக்கத்தில் 2001 ஆம் ஆண்டு வெளிவந்த தீனா திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர்.
இப்படத்தில் அஜித் குமார் லைலா சுரேஷ்கோபி மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படம் நடிகர் அஜித் குமாருக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. அல்டிமேட் ஸ்டாராக இருந்த அஜித் ரசிகர்களால் தல தல என்று அழைக்கப்பட ஆரம்பித்தனர்.
அதேபோல், முருகதாஸிற்கும் முதல் படமான தீனா திரைப்படம் மிக பெரிய வெற்றி படமாக அமைந்தது. அடுத்ததாக ஏ ஆர் முருகதாஸ் 2002ல் விஜயகாந்த், சிம்ரன், ஆஷிமா பல்லா, விஜயன் மற்றும் ரியாஸ்கான் நடிப்பில் ரமணா திரைப்படத்தை இயக்கி வெளியிட்டார்.
இந்த திரைப்படத்தில் அரசு அலுவலகங்களில் நடக்கக்கூடிய ஊழல்களை முற்றிலுமாக எப்படி நீக்குவது என்பதை கதையாக கொண்ட திரைப்படம். இத்திரைப்படம் ஒரு சில நேர்மறையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் சூப்பர்ஹிட் படமாக மாறியது விஜயகாந்தின் அரசியல் வாழ்க்கைக்கு அடித்தளம் இட்டது என்றே கூட சொல்லலாம். மேலும் இப்படம் அனைவாராலும் பேசப்பட்டது.
அடுத்ததாக ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு சூர்யா, அசின், நயன்தாரா, பிரதீப் ஆகியோர் நடிப்பில் கஜினி திரைப்படம் வெளிவந்தது. அமிசியா வால் பாதிக்கப்பட்ட ஒரு தொழிலதிபர் தன் காதலியின் கொலைக்கு காரணமானவர்களை பழிவாங்கும் கதை அம்சம் கொண்ட திரைப்படம் இது.
இத்திரைப்படம் வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது இத்திரைப்படத்தின் பாடல்களும் பெரிய அளவில் பேசப்பட்டது.
பின்னர், 2012ல் விஜய் நடிப்பில் துப்பாக்கி திரைப்படத்தை இயக்கினார். இப்படத்தில் நடிகர் விஜய், காஜல் அகர்வால், சத்யன் மற்றும் ஜெயராம் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படம் பல்வேறு பாராட்டுகளையும் பல விருதுகளையும் வாங்கி தந்து ஒரு சிறந்த திரைப்படமாக பேசப்பட்டது.
பிறகு, 2014ம் ஆண்டு மீண்டும் விஜய் முருகதாஸ் கூட்டணி அமைத்து கத்தி திரைப்படம் வெளிவந்தது. இத்திரைப்படத்தில் விஜய் இரண்டு வருடங்களில் நடித்திருப்பார்.
இப்படத்தில் சமந்தா, சதீஷ் ஆகியோர் நடித்திருப்பார்கள். இப்படத்தில் விவசாயிகளின் வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கத்துடன் எடுக்கப்பட்ட படமாகும்.
இப்படம் பல்வேறு பாராட்டுகளையும் விருதுகளையும் வாங்கித் தந்து ஒரு சிறந்த படமாக மாறியது. இப்படி பல வெற்றி படங்களை முன்னணி கதாநாயகர்களை வைத்து இயக்கிய இயக்குனர் முருகதாஸ் இப்பொழுது எவராலும் கண்டுகொள்ளாத நிலையில் உள்ளார் என்பது தமிழ் ரசிகர்களுக்கு பெருத்த வேதனையாக இருக்கிறது.