Homeசெய்திகள்சினிமாபாலிவுட்டையும் விட்டுவைக்காத ஃபகத் பாசில்... சிக்கந்தர் படத்தில் முக்கிய வேடம்... பாலிவுட்டையும் விட்டுவைக்காத ஃபகத் பாசில்… சிக்கந்தர் படத்தில் முக்கிய வேடம்…
- Advertisement -

மலையாள திரையுலகில் அறிமுகாகி மலையாள படங்களில் மட்டும் நடித்து வந்த ஃபகத் ஃபாசில் தற்போது, தென்னிந்திய சினிமாவிலும் முன்னணி நாயகனாக உயர்ந்திருக்கிறார். அதிரடியான, ஆக்ரோஷமான நடிப்பால் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் ஃபகத் ஃபாசில். கதாநாயகனாக நடித்திருந்தாலும் சரி வில்லனாக நடித்திருந்தாலும் சரி எந்த படம் என்றாலும் அதில் ஃபகத்தின் நடிப்பு பாராட்டப்படும். தமிழில் வேலைக்காரன், சூப்பர் டீலக்ஸ், விக்ரம் ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். இறுதியாக உதயநிதி ஸ்டாலின் மற்றும் வடிவேலு நடித்த மாமன்னன் படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.

இந்த படத்தில் ரத்தினவேல் என்ற சாதி வெறி கொண்ட வில்லனாக நடித்திருந்தார். இருப்பினும் இவரின் அசாத்தியமான நடிப்பை ரசிகர்கள் கொண்டாடினர். மேலும், தெலுங்கில் புஷ்பா முதல் பாகத்தில் நடித்த ஃபகத், தற்போது இரண்டாம் பாகத்திலும் வில்லனாக நடித்து வருகிறார். இது தவிர, ரஜினிகாந்த் நடிக்கும் வேட்டையன் திரைப்படத்திலும் ஃபகத் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரஜினிகாந்த் நடிக்கும் கூலி படத்திலும் ஃபகத் இணைவதாக கூறப்படுகிறது.

தமிழில் வேட்டையன், கூலி, மலையாளத்தில் பொகைன்விலியா, தெலுங்கில் புஷ்பா 2 என தென்னிந்திய மொழிகளில் கலக்கி வரும் ஃபகத் பாலிவுட்டையும் விட்டு வைக்கவில்லை. அதன்படி ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிக்கும் சிக்கந்தர் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஃபகத் பாசில் இணைவதாக கூறப்படுகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாக உள்ளது.