நடிகர் பகத் பாசில் ரஜினியுடன் இணைந்து நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ரஜினி, தனது 169 வது படமான ஜெயிலர் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு 170 ஆவது படத்தில் நடிக்க இருக்கிறார். இதனை லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் டிஜே ஞானவேல் இயக்க உள்ளார். அனிருத் இதற்கு இசை அமைக்க இருக்கிறார். இதில் ரஜினியுடன் இணைந்து மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர். இது குறித்த அறிவிப்புகளை லைக்கா நிறுவனம் அவ்வப்போது தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து கொண்டு வருகிறது. இந்நிலையில் தலைவர் 170 இல் பகத் பாசில் இணைந்துள்ளார் என்ற அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
Welcoming the incredibly versatile talent 🎭 Mr. Fahadh Faasil ✨ on board for #Thalaivar170🕴🏼#Thalaivar170Team gains a powerful new addition with the astonishing performer 🤨 #FahadhFaasil joining them. 🎬🤗🌟@rajinikanth @tjgnan @anirudhofficial @RanaDaggubati… pic.twitter.com/cOYwaKqbAL
— Lyca Productions (@LycaProductions) October 3, 2023
பகத் பாஸில் சமீபத்தில் மாமன்னன் திரைப்படத்தில் வில்லனாக நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். அதேபோல் தலைவர் 170 படத்தில் இவர் வில்லனாக நடிப்பதற்கு அதிக வாய்ப்புள்ளதாக பலரும் தன் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.