spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாநடிப்பு அரக்கன் பகத் பாசிலின் புதிய படம்… மிரட்டலான ட்ரைலர் வெளியானது!

நடிப்பு அரக்கன் பகத் பாசிலின் புதிய படம்… மிரட்டலான ட்ரைலர் வெளியானது!

-

- Advertisement -

நடிகர் பகத் பாசில் நடிப்பில் உருவாகியுள்ள தூமம் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

பிரபல மலையாள நடிகரான பகத் பாசில் மலையாளம் மட்டும் இல்லாமல் தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து பான் இந்தியா நடிகராக வலம் வருகிறார்.

we-r-hiring

அந்த வகையில் இவர் கடந்தாண்டு கமலின் நடிப்பில் வெளியான ‘விக்ரம்’ படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். அதையடுத்து தமிழில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள ‘மாமன்னன்’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் வருகின்ற ஜூன் 29ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

அதே சமயத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் புஷ்பா 2 படத்திலும் இவர் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இதற்கிடையில் கன்னட இயக்குனர் பவன் குமார் இயக்கத்தில் ‘தூமம்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

க ஜிஎஃப், ,காந்தாரா உள்ளிட்ட படங்களை தயாரித்த ஹோம்பேல் பிலிம்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்திருக்கிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கும் இந்த படம் வருகின்ற ஜூன் 23ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.

இந்நிலையில் திரில்லர் படமான இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்துள்ளது. தியேட்டரில் வெளியாகும் புகையிலை விளம்பரத்தை அடிப்படையாக வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளதாகத் தெரிகிறது.

MUST READ