Homeசெய்திகள்சினிமாஃபகத் பாசில், குஞ்சக்கோ போபன் நடிக்கும் புதிய படம்.... வெளியானது முதல் தோற்றம்...

ஃபகத் பாசில், குஞ்சக்கோ போபன் நடிக்கும் புதிய படம்…. வெளியானது முதல் தோற்றம்…

-

- Advertisement -
மலையாள ரசிகர்களால் ஃபாஃபா என்று அன்புடன் அழைக்கப்படுபவர் ஃபகத் ஃபாசில். மலையாள சினிமா மட்டுமன்றி, தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். அனைத்து படங்களிலும் தன்னுடைய ஆக்ரோஷமான நடிப்பினால் ஹீரோவையே மிஞ்சி விடுவார். கதாநாயகனாக நடித்திருந்தாலும் சரி வில்லனாக நடித்திருந்தாலும் சரி எந்த படம் என்றாலும் அதில் இவர்தான் ஹீரோ. மலையாளத் திரை உலகில் அறிமுகமான இவர் பல படங்களில் தன் நடிப்புத் திறமையை வெளிக்காட்டி வருகிறார்.

தமிழில் வேலைக்காரன், சூப்பர் டீலக்ஸ் விக்ரம் மற்றும் தெலுங்கில் புஷ்பா உள்ளிட்ட படங்களில் தனது தனித்துவமான நடிப்பினால் ரசிகர்களை கவர்ந்தார். தமிழில் இறுதியாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான மாமன்னன் படத்தில் வில்லனாக நடித்திருப்பார். இப்படத்தில் ரத்னவேலு என்ற கதாபாத்திரம் ஹீரோ கதாபாத்திரத்திற்கு நிகராக பேசப்பட்டது. இறுதியாக அவரது நடிப்பில் மலையாளத்தில் ஆவேஷம் என்ற திரைப்படம் வெளியாகி அதிரி புதிரி ஹிட் அடித்தது. வசூலையும் வாரிக்குவித்தது. தற்போது புஷ்பா 2-ம் பாகத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் ஃபகத் பாசில் நடிக்கும் புதிய திரைப்படம் குறித்த அறிவிப்பு வௌியாகி இருக்கிறது. இத்திரைப்படத்தை ஃபகத்தின் நெருங்கிய நண்பரான அமல் நீரட் இயக்குகிறார். இத்திரைப்படத்தில் ஃபகத் பாசில் மற்றும் பிரபல மலையாள நடிகர் குஞ்சக்கோ போபன் ஆகியோர் நடிக்கின்றனர். பொகைன்விலியா என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் போஸ்டர் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

MUST READ