தளபதி என்று கோடான கோடி ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் விஜய் கடைசியாக கோட் படத்தில் நடித்திருந்த நிலையில் தற்போது தளபதி 69 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் அவர் அரசியல்வாதியாக உருவெடுத்துள்ள நிலையில் (நேற்று) அக்டோபர் 27 விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் உள்ள வி. சாலையில் பிரம்மாண்டமாக நடைபெற்று முடிந்தது. இந்த மாநாட்டில் விஜய் சமூக நீதி, சமத்துவம், பெண்கள் பாதுகாப்பு கல்வி உள்ளிட்ட பல்வேறு கொள்கைகளை வெளியிட்டார். அதே சமயம் அரசியலிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என கூறி கூட்டணி தொடர்பாகவும் பேசியிருந்தார். விஜயின் ஆக்ரோஷமான அரசியல் பேச்சுக்கு பலரும் தங்களின் ஆதரவை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மெட்டிஒலி உள்ளிட்ட சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகர் போஸ் வெங்கட் தனது எக்ஸ் தள பக்கத்தில் விஜயின் அரசியல் பேச்சை கிண்டலடிக்கும் விதமாக பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
யப்பா.. உன் கூடவுமா அரசியல் பன்னனும்.. பாவம் அரசியல்.. பள்ளிக்கூட ஒப்பிப்பு.. சினிமா நடிப்பு. மற்றும் அதீத ஞாபக சக்தி.. வியப்பு.. எழுதி கொடுத்தவன் நல்ல வாசிப்பாளன்.. முடிவு??? பாப்போம்.. 😁😁😁
— Bose Venkat (@DirectorBose) October 27, 2024
அந்த பதிவில், “உன் கூட வருமா அரசியல் பண்ணனும்.. பாவம் அரசியல். பள்ளிக்கூட ஒப்பிப்பு, சினிமா நடிப்பு, அதீத ஞாபக சக்தி, வியப்பு, எழுதிக் கொடுத்தவன். நல்ல வாசிப்பாளர்.. முடிவு? பார்ப்போம்” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் போஸ் வெங்கட் சமீபத்தில் விமல் நடிப்பில் வெளியான சார் திரைப்படத்தை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.