spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாமின்சாரம் தாக்கி உயிரிழந்த ரசிகர்கள்.... வீட்டிற்கு சென்று இரங்கல் தெரிவித்த யாஷ்!

மின்சாரம் தாக்கி உயிரிழந்த ரசிகர்கள்…. வீட்டிற்கு சென்று இரங்கல் தெரிவித்த யாஷ்!

-

- Advertisement -

மின்சாரம் தாக்கி உயிரிழந்த ரசிகர்கள்.... வீட்டிற்கு சென்று இரங்கல் தெரிவித்த யாஷ்!நடிகர் யாஷ் கே ஜி எஃப் படங்களின் மூலம் இந்திய அளவில் பிரபலமானவர். கே ஜி எஃப் 1 மற்றும் கே ஜி எப் 2 படங்களுக்கு பிறகு கோடிக்கணக்கான ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்துள்ளார். அடுத்ததாக இவர் கீத்து மோகன்தாஸ் இயக்கத்தில் டாக்ஸிக் திரைப்படத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் அறிவிப்பு வீடியோ ஏற்கனவே வெளியாகி எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது.

இந்நிலையில் நடிகர் யாஷ் நேற்று தனது 38 வது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். அதே சமயம் கர்நாடகாவில் ஹனுமந்தப்பா ஹரிஜன், முரளி நடுவினமணி, நவீன் கஜ்ஜி உள்ளிட்ட யாஷின் ரசிகர்கள் யாஷுக்கு கட்-அவுட் வைக்க முயற்சித்து மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். இன்னும் சில பேர் காயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் யாஷுக்கும் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

we-r-hiring

எனவே நடிகர் யாஷ், தனது பிறந்தநாளில் உயிரிழந்த ரசிகர்களின் வீட்டிற்கு சென்று அவர்களின் குடும்பத்தினர்களுக்கும் உறவினர்களுக்கும் தனது ஆறுதலையும் இரங்கலையும் தெரிவித்துள்ளார்.

மேலும் “ரசிகர்கள் யாரும் இது போன்ற செயலில் ஈடுபட வேண்டாம். உங்களின் அன்பை சமூக வலைதளங்களில் செல்போனில் காண்பித்தால் கூட போதும். மனதில் இருந்தால் போதும். கட் அவுட் வைத்து அதனை வெளிப்படுத்த வேண்டாம். இதுபோன்று எதிர்காலத்தில் யாரும் செயல்பட வேண்டாம் முற்றிலும் தவிர்த்துவிடுங்கள்” என்று அறிவுரையும் வழங்கியுள்ளார் யாஷ்.

இது சம்பந்தமான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

MUST READ