பொத்திட்டு போகவும் என்று பாத்திமா பாபு ஒரு நபரை விளாசியுள்ள பதிவு இணையத்தில் வருகிறது.
தமிழ் மக்களிடையே மிகவும் பிரபலமான ஒருவர் பாத்திமா பாபு. இவர் செய்தி தொகுப்பாளராக மக்கள் மத்தியில் பிரபலமானவர். தமிழ் சினிமாவில் பல படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் பிக் பாஸ் தொடரில் மீண்டும் இடம் பெற்று ரசிகர்களின் வரவேற்பு பெற்றார். இந்நிலையில் பாத்திமா பாபு சமூக வலைதளத்தில் ஒருவரின் கமெண்டுக்காக அவரை விளாசியுள்ள பதிவு கவனம் பெற்று வருகிறது.
“உங்க ஆத்துக்காரர் இந்து தானே ஒரு இந்து பெயர் கூட உங்கள் குடும்பத்தில் இல்லையே பாத்திமா மேடம் வெரி பேட் அண்ட் சேட்” என்று ஒருவர் கமெண்ட் செய்துள்ளார்.
அதில் எங்களுக்கே பிரச்சனை இல்லை உங்களுக்கு என்ன பிரச்சனை என்று அவர் மீண்டும் கேட்டுள்ளார். இப்படியே சென்ற அந்த பதிவில் கடுப்பான பாத்திமா பொது மேடைல என்ன பிராண்ட் காண்டம் யூஸ் பண்றீங்கன்னு கூட கேப்பீங்களா. பொது மேடை இல்லையா.
ஒரு இந்துவா நிக்கா பண்ணிக்கிட்டதால பள்ளிவாசல்ல தான் நடந்தது. பொத்திகிட்டு போகவும்” என்று விளாசியுள்ளார். இந்தப் பதிவை அவரே தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்