- Advertisement -
லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் வெளியான ஃபைட் கிளப் படத்தின் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
உறியடி விஜயகுமார் நடிப்பில் அப்பாஸ் ஆர்.ரஹ்மத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஃபைட் கிளப். இப்படத்தில் கார்த்திகேயன் சந்தானம், ஷங்கர் தாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ரீல் குட் ஃபிலிம் தயாரித்துள்ள இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசை அமைத்துள்ளார். இப்படத்தை பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தயாரித்து உள்ளார். ஜி ஸ்குவாட் எனும் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி உள்ள லோகேஷ், தனது நிறுவனத்தின் முதல் படமாக ஃபைட் கிளப் படத்தை தயாரித்து உள்ளார்.
