Homeசெய்திகள்சினிமா'ஃபைட் கிளப்' பட வெற்றியை கேக் வெட்டி கொண்டாடும் படக்குழுவினர்!

‘ஃபைட் கிளப்’ பட வெற்றியை கேக் வெட்டி கொண்டாடும் படக்குழுவினர்!

-

- Advertisement -

'ஃபைட் கிளப்' பட வெற்றியை கேக் வெட்டி கொண்டாடும் படக்குழுவினர்!கடந்த 2019ல் விஜயகுமார் நடிப்பில் உறியடி திரைப்படம் வெளியானது. அரசியல் பின்னணியில் உருவாகியிருந்த இந்த படத்தை உறியடி விஜயகுமார் தானே எழுதி இயக்கி நடித்திருந்தார். இப்படம் வெளியாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.'ஃபைட் கிளப்' பட வெற்றியை கேக் வெட்டி கொண்டாடும் படக்குழுவினர்!

இந்நிலையில் உறியடி விஜயகுமார் ஃபைட் கிளப் எனும் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். போதைப் பொருள், கடத்தல் சம்பந்தமான கதைக்களத்தில் ஆக்ஷன் நிறைந்த படமாக இப்படம் உருவாகி இருந்தது. அதன்படி இப்படம் கடந்த 15ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஏழு நாட்களைக் கடந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ஃபைட் கிளப் படத்தின் மொத்த வசூல் ஒன்பது கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் வெற்றியை பட குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இது சம்பந்தமான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.'ஃபைட் கிளப்' பட வெற்றியை கேக் வெட்டி கொண்டாடும் படக்குழுவினர்!

மேலும் இந்த படத்தை அப்பாஸ் ஏ ரஹ்மத் இயக்கியுள்ள நிலையில் லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் நிறுவனமும் ரீல் குட் ஃபிலிம்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. கோவிந்த் வசந்தா இசையமைக்க லியோன் பிரிட்டோ ஒளிப்பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ