spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாகாசோலை மோசடி வழக்கில் சினிமா தயாரிப்பாளர் சிறையில் அடைப்பு

காசோலை மோசடி வழக்கில் சினிமா தயாரிப்பாளர் சிறையில் அடைப்பு

-

- Advertisement -
பாலிவுட்டில் தயாரிப்பாளராக வலம் வரும் ராஜ்குமார் சந்தோஷி, காசோலை மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்தி சினிமாவில், ஹயல், ஹடக், டமினி உள்பட பல திரைப்படங்களை தயாரித்து உள்ளார். இதனிடையே சினிமா பட தயாரிப்பிற்காக அவர் ஒரு கோடி ரூபாய் கடனாக வாங்கி இருக்கிறார். கடனை திருப்பிச் செலுத்த காசோலைகள் வழங்கி இருக்கிறார். ஆனால், ராஜ்குமாரில் வங்கி கணக்கில் பணம் இல்லாததால், காசோலைகள் நிரப்பப்பட்டுள்ளன. இதனால், தான் ஏமாற்றப்பட்டதாக கடன் கொடுத்த அசோக், ராஜ்குமார் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்நிலையில், குஜராத் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, ராஜ்குமார் காசோலை மோசடி செய்தது உறுதியானது. இதையடுத்து, குற்றவாளி ராஜ்குமாரை கைது செய்து 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அதேவேளை, தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ராஜ்குமாருக்கு அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. அவருக்கு 30 நாட்கள் கால அவகாசம், வழங்கப்பட்டு உள்ளது. இந்த காலத்தில் சிறை தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், தொழிலதிபர் அசோக் லாலுக்கு தயாரிப்பாளர் ராஜ்குமார் 2 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

MUST READ