- Advertisement -
தமிழக வெற்றி கழக கட்சியில் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என நடிகரும், கட்சியின் தலைவருமான விஜய் நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

தளபதி… தளபதி… என ரசிகர்களின் உரக்க குரலால் கொண்டாடப்பட்ட நாயகன் விஜய். தமிழில் கிட்டத்தட்ட 60-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள விஜய், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கொண்டாடும் ஒரு வெற்றி நாயகன் ஆவார். இறுதியாக இவரது நடிப்பில் லியோ திரைப்படம் வெளியானது. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வருகிறார். இப்படத்திற்கு கோட் என்று தலைப்பு வைத்துள்ளனர்.


இப்படத்தில் பெரும் நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து விஜய் 69-வது படத்திலும் நடிக்கிறார். இப்படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. அவர் பல நாட்களாக அரசியலுக்கு வருவதாக தகவல் தீயாய் பரவிக் கொண்டிருந்த நேரத்தில், அண்மையில் அரசியல் கட்சியை தொடங்கி இருப்பதாக அறிவிப்பு வெளியானது. இக்கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் என்று பெயர் வைத்து அறிவித்தார். இதனால் விஜய் ரசிகர்கள் அனைவரும் உற்சாகத்தில் இருந்தனர்.



