- Advertisement -
கங்கை அமரனின் மகனும், வெங்கட் பிரபுவின் தம்பியுமான பிரேம்ஜி ஏராளமான திரைப்படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளார். வெங்கட் பிரபு இயக்கிய பெரும்பாலான திரைப்படங்களில் இவர் நிச்சயம் இடம்பெற்றிருப்பார். தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் கோட் திரைப்படத்திலும், பிரேம்ஜி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். தமிழ் சினிமாவில் முரட்டு சிங்கிள் நட்சத்திரமாக வருகிறார் பிரேம்ஜி.

இவருக்கு எப்போது திருமணம் என தொடர்ந்து பல கேள்விகள் எழுந்தபோதிலும், மௌனம் காத்து வந்தார். ஆனால், திடீரென பிரேம்ஜியின் திருமண அழைப்பிதழ் சமூக வலைதளங்களில் வெளியாகி டிரெண்டானது. இந்து என்பவரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும், வரும் ஜூன் மாதம் 9-ம் தேதி திருத்தணி முருகன் கோயிலில் திருமணம் நடைபெற இருப்பதாகவும் அந்த அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.




