கௌதம் கார்த்திக் நடித்துள்ள படத்தின் ரிலீஸ் தேதி
கௌதம் கார்த்திக் நடித்துள்ள 1947- ஆகஸ்ட் 16 படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது
தீனா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் ஏ.ஆர்.முருகதாஸ். தொடர்ந்து, ரமணா, கஜினி என அடுத்தடுத்து வெற்றி படங்களை இயக்கி கோலிவுட்டில் தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டார். இதனிடையே, ‘ஏ.ஆர் முருகதாஸ் ப்ரொடைக்ஷன்ஸ்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் உருவாக்கி நடத்தி வருகிறார்.
ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் வெளியான எங்கேயும் எப்போதும், ராஜா ராணி, மான் கராத்தே ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றன. தற்போது அவர் தயாரிக்கும் புதிய படத்தில், கௌதம் கார்த்திக் நாயகனாக நடித்துள்ளது. இப்படத்திற்கு ‘1947- ஆகஸ்ட் 16‘ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர்.முருகதாஸிடம் இணை இயக்குனராக பணியாற்றிய என்.எஸ்.பொன்குமார் இந்த படத்தை இயக்குகிறார்.
இப்படத்தின் பாடல்கள் மற்றும் முன்னோட்டம் வெளியாகி ரசிகர்கள் இடைேய வரவேற்பை பெற்ற நிலையில், இப்படத்தின் வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, 1947- ஆகஸ்ட் 16 திரைப்படம் வரும் ஏப்ரல் 7-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.