Homeசெய்திகள்சினிமாமுதல் முறையாக தன் தாய் மொழியில் புதிய படத்தை இயக்கும் கௌதம் மேனன்!

முதல் முறையாக தன் தாய் மொழியில் புதிய படத்தை இயக்கும் கௌதம் மேனன்!

-

இயக்குனர் கௌதம் மேனன் கடைசியாக ஜோஷ்வா இமை போல் காக்க திரைப்படத்தை இயக்கியிருந்தார். அதைத் தொடர்ந்து அவருடைய இயக்கத்தில் உருவாகியுள்ள துருவ நட்சத்திரம் திரைப்படம் வெளியாக இருக்கிறது. இதைத்தொடர்ந்து மலையாள நடிகர் மம்மூட்டி நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்க இருக்கிறார் கௌதம் வாசுதேவ் மேனன்.

முதல் முறையாக தன் தாய் மொழியில் புதிய படத்தை இயக்கும் கௌதம் மேனன்!

நடிகர் மம்மூட்டி கேரள ரசிகர்களை மட்டுமல்லாமல் ஏராளமான தமிழ் ரசிகர்களையும் சேகரித்து வைத்துள்ளார். பல வெற்றி படங்களை கொடுத்து வரும் மம்மூட்டி கடைசியாக காதல் தி கோர், பிரம்மயுகம், டர்போ போன்ற படங்களில் நடித்திருந்தார். அதை தொடர்ந்து பல வெற்றி படங்களை தந்த கௌதம் மேனன் இயக்கத்தில் மம்மூட்டி நடிக்க இருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது.முதல் முறையாக தன் தாய் மொழியில் புதிய படத்தை இயக்கும் கௌதம் மேனன்!

அதன்படி கௌதம் வாசுதேவ் மேனன், மம்மூட்டி கூட்டணியில் உருவாக இருக்கும் புதிய படத்தை மம்மூட்டி தயாரிக்கப் போகிறார் என்று சொல்லப்படுகிறது. மேலும் நடிகை நயன்தாரா வாசுகி (புதிய நியமம்), பாஸ்கர் தி ராஸ்கல் உள்ளிட்ட படங்களுக்கு பிறகு மம்மூட்டியுடன் இணைந்து இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்ற ஏற்கனவே தகவல் கசிந்திருந்தது.முதல் முறையாக தன் தாய் மொழியில் புதிய படத்தை இயக்கும் கௌதம் மேனன்!

இந்நிலையில் இதன் புதிய அப்டேட் என்னவென்றால் இந்த படம் முழுக்க முழுக்க மலையாள மொழியில் தான் உருவாக இருக்கிறதாம். அதாவது கௌதம் வாசுதேவ் மேனன் இதுவரை தமிழ் படங்களை மட்டுமே இயக்கி வந்த நிலையில் முதன்முறையாக தன் தாய் மொழியில் புதிய படத்தை இயக்க இருக்கிறார் என்று தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ