spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாரீ ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யாவின் கஜினி

ரீ ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யாவின் கஜினி

-

- Advertisement -
சூர்யா நடித்த கஜினி திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் வௌியாக உள்ளது.

2001 ஆம் ஆண்டு வெளிவந்த தீனா திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் ஏ ஆர் முருகதாஸ். அடுத்ததாக ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் கஜினி. இப்படத்தில் சூர்யா நாயகனாக நடித்திருந்தார். மேலும், அசின் மற்றும் நயன்தாரா இருவரும் படத்தில் ஜோடியாக நடித்திருந்தனர்.

we-r-hiring
அமிசியா வால் பாதிக்கப்பட்ட ஒரு தொழிலதிபர் தன் காதலியின் கொலைக்கு காரணமானவர்களை பழிவாங்கும் கதை அம்சம் கொண்ட திரைப்படம் இது. இத்திரைப்படம் வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது இத்திரைப்படத்தின் பாடல்களும் பெரிய அளவில் பேசப்பட்டது. இன்று வரை கஜினி திரைப்படம் பெரிதளவில் பேசப்படும்.

கஜினி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இத்திரைப்படம் இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், சூர்யாவின் கஜினி திரைப்படம் ரீ ரிலீஸ் ஆகவுள்ளது. வரும் ஜூன் மாதம் 7-ம் தேதி இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.

MUST READ