spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஹாலிவுட் நடிகை சூஸன் ஷெப்பர்ட் காலமானார்

ஹாலிவுட் நடிகை சூஸன் ஷெப்பர்ட் காலமானார்

-

- Advertisement -

பிரபல ஹாலிவுட் நடிகை சூஸன் ஷெப்பர்ட் உயிரிழந்தார். அவருக்கு வயது 89 ஆகும்.

ஹாலிவுட் நடிகை சூஸன் ஷெப்பர்ட், ‘குட் ஃபெல்லாஸ்’, ‘மிஸ்டிக்பீட்ஸா’, அங்கிள் பக், ‘எ டர்ட்டி ஷேம்’ உட்பட பல ஆங்கில படங்களில் நடித்து புகழ் பெற்றவர். வெள்ளித்திரை மட்டுமன்றி சின்னத்திரை தொடர்களிலும் அவர் நடித்துள்ளார்.

we-r-hiring
அவர் நடிப்பில் ஹெச்.பி.ஒ சேனலில் ஒளிபரப்பான ‘தி சோப்ரனோஸ்’ தொடர் மூலம் அவர் மிகவும் புகழ் பெற்றார். அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வசித்து வந்த இவர், மரணமடைந்துவிட்டதாக அவர், பேத்தி இசபெல் தெரிவித்துள்ளார்.

அவர் இறப்பிற்கான காரணம் இதுவரை தெரிவிக்கப் படவில்லை. வயது மூப்பு காரணாக இறந்திருக்கலாம் என பலரும் தெரிவித்து வருகின்றனர். இருப்பினும், இது தொடர்பாக விசாரணை நடைபெற்று விரைவில் அறிவிக்கப்படும் என்று சூஸனின் குடும்பத்தினர்கள் தெரிவித்துள்ளனர். சூஸனின் மறைவுக்கு  ஹாலிவுட் திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

MUST READ