- Advertisement -
லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ் போல தனி யுனிவர்ஸை உருவாக்கும் திட்டம் தனக்கும் உண்டு என இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள துருவ நட்சத்திரம் திரைப்படம் கடந்த 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு ரிலீஸ் ஆகாமல் நீண்ட நாள் நிலுவையில் இருந்தது. இதனை கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ளார். இதில் விக்ரமுடன் இணைந்து ராதிகா சரத்குமார்,ரித்து வர்மா, சிம்ரன், விநாயகன், திவ்யதர்ஷினி மற்றும் பலர் நடித்துள்ளனர். சமீபத்தில் படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. விக்ரம் இந்த படத்தில் மூன்று வேடங்களில் நடித்துள்ளார். ஒன்றாக என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்துள்ளார். மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் நவம்பர் 24-ம் தேதி வெளியாகும் என படக்குழு அண்மையில் அறிவித்திருந்தது.

