- Advertisement -
தமிழ் சினிமாவின் பிரபல முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் ஜிவி பிரகாஷ் குமார். இவர் விக்ரம் நடிக்கும் தங்கலான் மற்றும் தனுஷ் நடிக்கும் கேப்டன் மில்லர் போன்ற பெரும்பாலான படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவர் இசையமைப்பதுடன் மட்டுமல்லாமல் நடிப்பிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.
திரிஷா இல்லனா நயன்தாரா, பென்சில், நாச்சியார், உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.
தற்போது கள்வன், அடியே, டியர் போன்ற படங்களிலும் நடித்து வருகிறார்.
இவ்வாறு இசையிலும் நடிப்பிலும் பிஸியாக இருக்கும் ஜிவி பிரகாஷ் “இந்தியாவின் பிரபல இயக்குனரின் இயக்கத்தில் நடிக்க இருப்பதாகவும், அது சம்பந்தமான அறிவிப்பை அந்த இயக்குனரே விரைவில் அறிவிப்பார்” எனவும் சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.