- Advertisement -
தனது நடிப்பில் வெளியான திரைப்படங்களில் 17 திரைப்படங்கள் மட்டும் புதுமுக இயக்குநர்களுடன் பணியாற்றி இருப்பதாக நடிகர் ஜிவி பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

வெயில் திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனவர் ஜி.வி.பிரகாஷ். கிட்டத்தட்ட 100 திரைப்படங்களுக்கு இவர் இசை அமைப்பாளராக பணியாற்றி இருக்கிறார். தமிழ், தெலுங்கு உள்பட பல மொழிகளில் இவர் பாடல்களும் பாடி இருக்கிறார். மேலும், தேசிய விருது உள்பட பல விருதுகளை அவர் வென்றுள்ளார். இசை, பாடல் மட்டுமன்றி நடிப்பிலும் ஆர்வம் செலுத்தும் ஜி.வி.பிரகாஷ், டார்லிங் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இதுவரை 24 திரைப்படங்களில் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ளார்.


அவரது நடிப்பில் இறுதியாக அடியே என்ற படம் வெளியானது. அடுத்து கள்வன், ரிபெல் ஆகிய படங்கள் வௌியீட்டுக்கு தயாராகி வருகின்றன. அவரது நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் திரைப்படம் இடி முழக்கம். சீனு ராமசாமி படத்தை இயக்கி உள்ளார். அவருக்கு ஜோடியாக காயத்ரி ஷங்கர் நடித்துள்ளார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து பின்னணி வேலைகள் நடைபெற்று வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.



