Homeசெய்திகள்சினிமா'கேப்டன் மில்லர்' ஃபர்ஸ்ட் சிங்கள் குறித்த அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்!

‘கேப்டன் மில்லர்’ ஃபர்ஸ்ட் சிங்கள் குறித்த அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்!

-

- Advertisement -

தனுஷ் நடிப்பில் கேப்டன் மில்லர் திரைப்படம் உருவாகி வருகிறது. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் இந்த படத்தை அருள் மாதேஸ்வரன் இயக்குகிறார். இதில் தனுஷ் உடன் இணைந்து சிவராஜ் குமார், பிரியங்கா மோகன், ஜான் கொக்கேன், நிவேதிதா சதீஷ் மற்றும் பலர் நடிக்கின்றனர். தனுஷின் கேரியரில் மிகவும் முக்கியமான படமாக கருதப்படும் இந்த படம் மூன்று பாகங்களாக வெளியாக இருக்கிறது. சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும் ஜிவி பிரகாஷ் இசைகளும் இப்படம் உருவாகிறது. சமீபத்தில் படத்தின் டீசர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற செய்தது.

மேலும் இப்படம் வருகின்ற டிசம்பர் 15ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் ஜிவி பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், “நீ தனியா வந்தா தல மட்டும் உருளும்…. நீ படையா வந்தா சவ மழை குவியும்…” எனும் பாடல் விரைவில் என்று பதிவிட்டுள்ளார். எனவே படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த அப்டேட் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ