Homeசெய்திகள்சினிமாஜிவி பிரகாஷ், தேஜு அஸ்வினி நடிப்பில் உருவாகி வரும் 'பிளாக்மெயில்'!

ஜிவி பிரகாஷ், தேஜு அஸ்வினி நடிப்பில் உருவாகி வரும் ‘பிளாக்மெயில்’!

-

- Advertisement -

ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தின் அப்டேட் கிடைத்துள்ளது.

ஜிவி பிரகாஷ் தற்போது ‘பிளாக்மெயில்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ மற்றும் கண்ணை நம்பாதே படங்களின் இயக்குனர் மு.மாறன் இயக்குகிறார்.

நடிகை தேஜு அஸ்வினி இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். பிந்துமாதவி, ஸ்ரீகாந்த் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இந்தப் படத்திற்கு டி.இமான் இசை அமைக்கிறார். ஜெயக்கொடி பிக்சர்ஸ் சார்பில் அமல்ராஜ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

தற்போது இந்தப் படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு கோவையில் மே 14-ம் தேதி தொடங்குகிறது. அங்கு பரபரப்பான ஆக்‌ஷன் காட்சிகளை படமாக்க இருக்கின்றனர்.

இதற்கிடையில் சீனு ராமசாமி இயக்கத்தில் ‘இடிமுழக்கம்’, ’13’, ‘அடியே’ மற்றும் ‘கள்வன்’ உள்ளிட்ட பல படங்களை ஜிவி பிரகாஷ் கைவசம் வைத்துள்ளார்.

MUST READ