ஜிவி பிரகாஷ் தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராகவும் நடிகராகவும் வலம் வருபவர். அந்த வகையில் ஜி வி பிரகாஷ், பல படங்களில் தரமான இசையின் மூலம் பல ஹிட் பாடல்களை கொடுத்து வருகிறார். அதேசமயம் கதாநாயகனாகவும் கலக்கி வருகிறார். அந்த வகையில் டியர், கிங்ஸ்டன் போன்ற படங்களை கைவசம் வைத்திருக்கிறார். சமீபத்தில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் அடியே என்னும் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இதற்கிடையில் ஜிவி பிரகாஷ் ரிபெல் எனும் திரைப்படத்தில் நடிக்கிறார். இதனை புது முக இயக்குனர் நிகேஷ் இயக்குகிறார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் ஞானவேல் ராஜா மற்றும் சி வி குமார் ஆகியோர் இணைந்து இந்த படத்தை தயாரிக்க ஜிவி பிரகாஷ் இதற்கு இசை அமைக்கிறார்.
கடந்த 2021 இல் ஆரம்பிக்கப்பட்ட ரிபெல் படத்தின் படப்பிடிப்பு கடந்த அக்டோபர் மாதத்தில் நிறைவடைந்ததாக படக்குழுவினரால் அறிவிக்கப்பட்டது. இப்படம் ஆக்ஷன் கலந்த கதைக்களத்தில் உருவாகியுள்ளது. மேலும் சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகி கவனம் பெற்றது. இந்த படத்தில் ஜிவி பிரகாஷ், மமிதா பைஜூ, கருணாஸ், கல்லூரி வினோத், சுப்பிரமணிய சிவா, வி.பி. வெங்கடேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
தற்போது இதன் புதிய அப்டேட் என்னவென்றால், ரிபெல் படத்தின் அழகான சதிகாரி எனும் முதல் பாடல் வருகின்ற டிசம்பர் 1ஆம் தேதி (நாளை) மாலை 6 மணி அளவில் வெளியாகும் என்று படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.