Homeசெய்திகள்சினிமாத்ரில்லர் படத்தில் நடிக்கும் ஜி.வி.பிரகாஷ்... டப்பிங் பணிகள் தொடக்கம்...

த்ரில்லர் படத்தில் நடிக்கும் ஜி.வி.பிரகாஷ்… டப்பிங் பணிகள் தொடக்கம்…

-

தமிழ் திரையுலகில் முன்னணி மற்றும் இளம் இசையமைப்பாளராக வலம் வருபவர் ஜி.வி.பிரகாஷ். கிட்டத்தட்ட 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசை அமைத்துள்ள ஜி.வி. தற்போது நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். ஆண்டுக்கு ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் மட்டும் குறைந்தபட்சம் 3 திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகின்றன.

அண்மையில் அவரது நடிப்பில் வெளியான திரைப்படம் டியர். ஆயிரம் பொன் என்ற படத்தை இயக்கிய ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கி இருக்கிறார். இதில் ஜிவி பிரகாஷ் உடன் இணைந்து ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் காளி வெங்கட், ரோகிணி, தலைவாசல் விஜய், பிளாக் ஷீப் நந்தினி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் கடந்த மாதம் திரையரங்குகளில் வௌியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதைத் தொடர்ந்து மீண்டும் ஒரு திரில்லர் படத்தில் ஜிவி பிரகாஷ் நடித்து வருகிறார். இத்திரைப்படத்திற்கு 13 என்று தலைப்பு வைக்கப்பட்டு உள்ளது. இத்திரைப்படத்தில் ஜிவியுடன் இணைந்து கௌதம் மேனன் நடித்துள்ளார். இதில் ஆத்யா பிரசாத், பவ்யா த்ரிக்கா, தொகுப்பாளினி ஐஸ்வர்யா உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டார்லிங் படத்திற்கு பிறகு ஜிவி பிரகாஷ் நடிக்கும் திரில்லர் திரைப்படம் இதுதான். இந்நிலையில், இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவு செய்துள்ளது. தற்போது படப்பிடிப்புக்கு பின்னரான டப்பிங் மற்றும் பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

MUST READ