Homeசெய்திகள்சினிமாநடிகர் அஜித்திற்கு ரங்கோலி வரைந்து பிறந்தநாள் வாழ்த்து

நடிகர் அஜித்திற்கு ரங்கோலி வரைந்து பிறந்தநாள் வாழ்த்து

-

- Advertisement -

நடிகர் அஜித்திற்கு ரங்கோலி வரைந்து பிறந்தநாள் வாழ்த்து

நடிகர் அஜித்குமாரின் பிறந்தநாளான இன்று புதுச்சேரியை சேர்ந்த ஓவியர் அறிவழகி, 12 அடி உயரத்தில் அஜித்குமாரின் உருவத்தை ரங்கோலியாக வரைந்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ajith

புதுச்சேரி அடுத்த முருங்கப்பாக்கத்தை சேர்ந்தவர் ஓவிய பெண் அறிவழகி. ஓவியரான இவர் தேச தலைவர்களின் பிறந்தநாள் மற்றும் நினைவு நாளின் போது அவர்களுடைய உருவத்தை தத்ரூபமாக கோலமாவுகளைக் கொண்டு ரங்கோலியாக வரைந்து அசத்தி வருகிறார். அது மட்டும் இல்லாமல் காந்தியடிகள், டாக்டர் அப்துல் கலாம், சச்சின் டெண்டுல்கர், தோனி ஆகியோரின் உருவங்களையும் ரங்கோலியாக வரைந்து அசத்தியுள்ளார்.

அந்த வகையில் மே 1-ம் தேதியான இன்று நடிகர் அஜித்குமாரின் பிறந்தநாளையொட்டி, தனது வீட்டில் 12 அடி உயரம் 8 அடி அகலத்தில் 4 கிலோ கலர் கோலமாவுகளைக் கொண்டு அஜித்குமாரின் உருவத்தை தத்ரூப ஓவியமாக வரைந்து அசத்தியுள்ளார். சுமார் 5 மணி நேரமாக ரங்கோலியாக வரைந்து அசத்தி பிறந்த வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இவரது முயற்சிக்கு அஜித் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

MUST READ