Homeசெய்திகள்சினிமாஅருண் விஜய் பட இயக்குனரின் அடுத்த படத்தில் ஹரிஷ் கல்யாண்.... வெளியான புதிய தகவல்!

அருண் விஜய் பட இயக்குனரின் அடுத்த படத்தில் ஹரிஷ் கல்யாண்…. வெளியான புதிய தகவல்!

-

- Advertisement -

அருண் விஜய் பட இயக்குனரின் அடுத்த படத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிக்கப்போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.அருண் விஜய் பட இயக்குனரின் அடுத்த படத்தில் ஹரிஷ் கல்யாண்.... வெளியான புதிய தகவல்!

நடிகர் ஹரிஷ் கல்யாண் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவராவார். இவரது நடிப்பில் வெளியான பார்க்கிங், லப்பர் பந்து ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்று வெற்றி படமாக அமைந்தது. அடுத்தது ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகி இருக்கும் டீசல், நூறு கோடி வானவில் போன்ற படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன. அதே சமயம் லப்பர் பந்து படத்தின் வெற்றியை தொடர்ந்து ஹரிஷ் கல்யாண் தொடர்ந்து பல படங்களில் கமிட் ஆகி வருகிறார். அந்த வகையில் அந்தகாரம் பட இயக்குனர் விக்னராஜன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கப் போகிறார் ஹரிஷ் கல்யாண். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏற்கனவே வெளியானது. மேலும் கவினின் லிப்ட் பட இயக்குனர் வினித் வரபிரசாத் இயக்கத்திலும் புதிய படம் ஒன்றில் நடிக்கப் போகிறார் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் ஹரிஷ் கல்யாணின் லைன் அப்பில் அருண் விஜய் பட இயக்குனரும் இணைந்துள்ளார். அருண் விஜய் பட இயக்குனரின் அடுத்த படத்தில் ஹரிஷ் கல்யாண்.... வெளியான புதிய தகவல்!அதாவது ஆர்யாவின் மதராசபட்டினம், விக்ரமின் தெய்வத்திருமகள், அருண் விஜயின் மிஷன் சாப்டர் 1 ஆகிய படங்களின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த ஏ. எல். விஜய், ஹரிஷ் கல்யாணை இயக்குவதாக புதிய தகவல் கிடைத்துள்ளது. அதுமட்டுமில்லாமல் இந்த படத்திற்கு KRR என்று தலைப்பு வைக்கப்பட்டிருப்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இனிவரும் நாட்களில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது.

ஏ.எல். விஜய் மிஷன் சாப்டர் 1 படத்திற்கு பிறகு மாதவன் நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

MUST READ