ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
இந்திய கிரிக்கெட் வீரர் தோனி தற்போது சினிமாவில் தயாரிப்பாளராக களம் இறங்கியுள்ளார். தோனியின் தயாரிப்பு நிறுவனம் முதல் முறையாக தமிழ் படம் ஒன்றை தயாரிக்கின்றனர்.
படத்திற்கு LGM என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. வா கல்யாணம் பண்ணிக்கலாம் (Lets Get Married) என்பது தான் படத்தின் தலைப்பு. ரமேஷ் தமிழ்மணி என்பவர் இந்த படத்தை இயக்குகிறார். அவர் இந்த படத்திற்கு இசையமைக்கவும் செய்கிறார்.
ஹரிஷ் கல்யாண், நதியா மற்றும் இவானா மூவரும் முன்னணிக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். யோகி பாபு இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். லவ் டுடே படத்திற்கு கிடைத்த நல்ல வரவேற்பை அடுத்து இந்தப் படத்தில் இவனா கதாநாயகியாக களமிறங்கியுள்ளார்.
தற்போது இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. போஸ்டரில் ஹரிஷ் கல்யாண், நதியா மற்றும் இவானா மூவரும் இடம் பிடித்துள்ளனர். படம் நல்ல பேமிலி எண்டெர்டெயினராக உருவாகியுள்ளதாகத் தெரிகிறது. படம் இந்தாண்டும் கோடை விடுமுறையில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.