Homeசெய்திகள்சினிமாஇந்தியாவின் முதல் தபால்காரன்...... ஹர்காரா படத்தின் ரிலீஸ் தேதி அப்டேட்!

இந்தியாவின் முதல் தபால்காரன்…… ஹர்காரா படத்தின் ரிலீஸ் தேதி அப்டேட்!

-

ஹர்காரா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹர்காரா திரைப்படத்தை V1 மர்டர் கேஸ் திரைப்படத்தில் நடித்திருந்த ராம் அருண் காஸ்ட்ரோ இதனை இயக்கி நடித்துள்ளார். மற்றொரு கதாநாயகனாக காளி வெங்கட் நடித்துள்ளார். இப்படம் இந்தியாவின் முதல் தபால் மனிதனின் கதையாகும்.

அதாவது, செல்போன் போன்ற எந்த வித டிஜிட்டல் வசதிகளும் ஊடுருவாத காலகட்டத்தில், மலை கிராமங்களில் வாழும் மக்களின் வாழ்வியலை சொல்லும் கதையாகவும், அந்த மலை கிராமத்திற்கு செல்லும் ஒரு தபால்காரரின் கஷ்டங்களை பின்னணியாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளது.

இப்படத்தை கலர்ஃபுல் பீட்டா மூமண்ட் நிறுவனம் தயாரிக்க ராம் சங்கர் இசையமைத்துள்ளார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கடந்த ஜூன் மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து படத்தின் கான்செப்ட் டீசர் மற்றும் முதல் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

வித்தியாசமான கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் தேனி மலை கிராம பகுதியில் நடைபெற்று வந்தது. தற்போது இந்த படம் வருகின்ற ஆகஸ்ட் 25ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

MUST READ