spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாமூளையில் ரத்தக்கசிவு... பிரபல நடிகை மருத்துவமனையில் அனுமதி...

மூளையில் ரத்தக்கசிவு… பிரபல நடிகை மருத்துவமனையில் அனுமதி…

-

- Advertisement -
பழம்பெரும் கன்னட திரைப்பட நடிகை ஹேமா சவுத்ரி, உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கன்னட திரையுலகின் பிரபல நடிகையாக வலம் வந்தவர் ஹேமா சவுத்ரி. கடந்த இரு நாட்களுக்கு முன்பாக மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவு காரணமாக பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவரது உடல்நிலையில், எந்த முன்னேற்றமும் இல்லை எனவும், அவருக்கு தீவிர சிகிச்சை தேவைப்படுகிறது எனவும் மருத்துவ நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. நடிகை ஹேமாவுக்கு அடுத்தக்கட்ட சிகிச்சை அளிப்பது தொடர்பாக கலந்து ஆலோசிக்க வெளிநாட்டில் இருக்கும் அவரது மகன் வருகைக்காக குடும்பத்தினர் காத்திருப்பதாக தெரிவித்தனர்.

we-r-hiring
1976-ம் ஆண்டு தெலுங்கில் தனது திரைப்பயணத்தை தொடங்கி ஹேமா, துணை நடிகையாகவும், வில்லியாகவும் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு திரையுலகம் மட்டுமில்லாது கன்னடத்திலும் விஜய் வாணி, தீபா என 90-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். ரசிகர்களிடையே பிரபலமான நடிகை என்பதையும் தாண்டி சிறந்த குச்சுப்புடி நடனக்கலைஞராகவும் கொண்டாடப்பட்டவர் ஹேமா. உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளுக்குச் சென்று 700-க்கும் மேற்பட்ட மேடை ஏறி குச்சுரப்புடி நடனம் ஆடியிருக்கிறார்.

கன்னடம், தெலுங்கில் அதிக திரைப்படங்களில் நடித்திருந்தாலும், சென்னை திரைப்படக் கல்லூரியில் நடிகர் ரஜினிகாந்துடன் சேர்ந்து தனது திரைப்படக் கல்வியை முடித்தார். தமிழில் மன்மத லீலை, குங்குமம், ஸ்டார், நான் அவன் இல்லை, தோட்டா உள்ளிட்ட படங்களில் அவர் நடித்துள்ளார். இந்நிலையில், விரைவில் ஹேமா குணமடைந்து வீடு திரும்ப ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

MUST READ