spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாவிரைவில் 'அமரன்' படத்திலிருந்து 'ஹே மின்னலே' பாடல்.... ஜி.வி. பிரகாஷ் கொடுத்த அப்டேட்!

விரைவில் ‘அமரன்’ படத்திலிருந்து ‘ஹே மின்னலே’ பாடல்…. ஜி.வி. பிரகாஷ் கொடுத்த அப்டேட்!

-

- Advertisement -

அமரன் திரைப்படத்திலிருந்து ஹே மின்னலே எனும் பாடல் விரைவில் வெளியாகும் என இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் அப்டேட் கொடுத்துள்ளார்.விரைவில் 'அமரன்' படத்திலிருந்து 'ஹே மின்னலே' பாடல்.... ஜி.வி. பிரகாஷ் கொடுத்த அப்டேட்!

சிவகார்த்திகேயனின் 21வது படமாக உருவாகியிருக்கும் திரைப்படம் தான் அமரன். இந்த படத்தில் ரங்கூன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருக்கிறார். ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். சி. எச். சாய் இதன் ஒளிப்பதிவு பணிகளையும் மேற்கொண்டுள்ளார். ராணுவத்தின் பின்னணியில் உருவாகி வரும் இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடித்திருக்கிறார். விரைவில் 'அமரன்' படத்திலிருந்து 'ஹே மின்னலே' பாடல்.... ஜி.வி. பிரகாஷ் கொடுத்த அப்டேட்!அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். மறைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றுப் படமாக உருவாகி இருக்கும் இந்த படம் வருகின்ற அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி தினத்தன்று உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. மிக பிரம்மாண்டமாகவும் மிகுந்த எதிர்பார்ப்புகளுடனும் உருவாகியிருக்கும் இந்த படத்தின் டீசரும் அடுத்தடுத்த போஸ்டர்களும் வெளியாகி ரசிகர்களின் கவனம் ஈர்த்துள்ளது. அடுத்ததாக இந்த படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாகும் என ஏற்கனவே தகவல்கள் கசிந்திருந்தன.

we-r-hiring

அதன்படி ஹே மின்னலே எனும் முதல் பாடல் இன்னும் சில நாட்களில் வெளியாகும் என ஜி.வி. பிரகாஷ் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் இந்த பாடலானது சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகிய இருவருக்குமான காதல் பாடல் என்று தெரியவந்துள்ளது. விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ