Homeசெய்திகள்சினிமாதிருப்பதியில் ஹாய் நான்னா படக்குழு சாமி தரிசனம்

திருப்பதியில் ஹாய் நான்னா படக்குழு சாமி தரிசனம்

-

நானி நடிப்பில் உருவாகி உள்ள ஹாய் நான்னா திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில், திருப்பதியில் படக்குழு சாமி தரிசனம் செய்துள்ளது.

தெலுங்கு சினிமாவின் இளம் நாயகனாக வலம் வருபவர் நானி. ஷியாம் சிங்கா ராய், தசரா ஆகிய படங்கள் நானி நடிப்பில் அண்மையில் வெளியாகின. தரசா படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்திருந்தார். இத்திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது.

நடிகர் நானி தசரா திரைப்படத்திற்கு பிறகு ஹாய் நான்னா திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நானிக்கு ஜோடியாக மிர்ணாள் தாகூர் நடித்துள்ளார். நாணியின் முப்பதாவது திரைப்படம் ஆன இந்த படத்தை சௌரவ் இயக்கியுள்ளார். சனு ஜான் வர்கீஸ் ஒளிப்பதிவியிலும் தேசம் அப்துல்லா இசையிலும் இப்படம் உருவாகியுள்ளது. வைரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இதனை தயாரித்துள்ளது. இப்படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றன.

இத்திரைப்படம் நாளை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது. இதை முன்னிட்டு படம் வெற்றி பெற வேண்டி படக்குழுவினர் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்தனர். நானி மற்றும் படக்குழுவினர் கோயில் சென்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

MUST READ