இந்திய அளவில் புகழ்பெற்ற இசையமைப்பாளர்களில் ஒருவர் ஏ.ஆர். ரஹ்மான். அதாவது இந்திய இசை வரலாற்றில் புரட்சியை ஏற்படுத்திய இவர், இசைப்புயல், மெலோடியின் மாஸ்டர் என்று பலராலும் அழைக்கப்படுகிறார். மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘ரோஜா’ படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமாகி அனைவரின் மனதையும் கொள்ளை கொண்டார். அதன் பிறகு எத்தனை இசையமைப்பாளர்கள் வந்தாலும் ஏ.ஆர். ரஹ்மானின் இசையில் உள்ள மேஜிக் அனைவரையும் வசியப்படுத்திவிடும். அந்த வகையில் கிட்டத்தட்ட 33 வருடங்களாக திரைத்துறையில் கோலாட்சி செய்து வரும் இவரை ரசிகர்கள் இன்றுவரையிலும் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் தான் மணிரத்னம் இயக்கத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து வெளியான பொன்னியின் செல்வன் பாகம் 2 படத்தில் இடம்பெற்ற வீரா ராஜா வீரா பாடலானது சிவ ஸ்துதி பாடலைப் போலிருக்கிறது என ஃபயாஸ் வாசிஃபுதின் தாகர் என்பவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஏ.ஆர். ரஹ்மான் மீது பதிப்புரிமை மீறல் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கில் ஏ.ஆர். ரஹ்மான், டெல்லி உயர் நீதிமன்றம் பதிவாளர் அலுவலகத்தில் ரூ. 2 கோடி அபராதம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. இதனை எதிர்த்து ஏ.ஆர். ரஹ்மான் மனு தாக்கல் செய்த நிலையில், இந்த வழக்கை இன்று (மே 6) நீதிபதிகள் ஹரிசங்கர் மற்றும் அஜய் திக்பால் ஆகியோர் விசாரித்தனர் . ஏ.ஆர். ரஹ்மானின் மேல்முறையீட்டு மனுவை பரிசீலித்த நீதிபதிகள், தனி நீதிபதியின் முந்தைய உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
- Advertisement -